எலுமிச்சை ஊறுகாய்

 தேவையான பொருட்கள் :

எலுமிச்சை - 500 கிராம்

உப்பு - தேவையான அளவு

மிளகாய்த்தூள் - 6 ஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்

நல்லெண்ணெய் - 200 மில்லி


செய்முறை :

எலுமிச்சை நான்கு துண்டுகளாக அல்லது சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு சேர்த்து ஊற வைக்கவும், ஊற வைத்து அதை நான்கு நாட்களுக்கு குலுக்கி நன்றாக திருப்பி விட்டு நன்றாக ஊற விடவும், எலுமிச்சை நன்றாக நிறம் மாறிய பிறகு தாளிக்கலாம்.

      தாளிப்பதற்கு முதலில் வடை கல்லில் நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் மிதமான சூட்டில் தீயை குறைத்து கடுகு இடவும் பிறகு கடுகு வெடித்தவுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து மிளகாய் தூள் சேர்த்து கிளறவும் 

      பின்பு எலுமிச்சை சேர்த்து நன்றாக அடுப்பில் வைத்துக் கிளறி ஐந்து நிமிடம் மூடி வைக்கவும் எலுமிச்சை நன்றாக வெந்ததும் இறக்கி வைத்து,ஆறியவுடன்  ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்


Comments

Popular Posts